1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (22:59 IST)

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்: நாசா எச்சரிக்கையால் பரபரப்பு!

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்
பூமியை நோக்கி அவ்வப்போது விண்கல் வந்து கொண்டிருக்கும் என்பதும், அவை பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நாசா எச்சரித்து வருவதும் தெரிந்ததே. இருப்பினும் இதுவரை எந்த விண்கலமும் பூமியை தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் மார்ச் 21 ஆம் தேதி அன்று பூமியை ஒரு மிகப்பெரிய சிறுகோள் ஒன்று கடக்க இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது இந்த சிறு கோள் பூமிக்கு மிகவும் ஆபத்தானது என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பூமியை கடக்கும் இந்த சிறு கோள் பூமியை மீது உரசினாலோ அல்லது பூமியின் மேல் விழுந்தாலோ மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது