செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (16:00 IST)

கறுப்பினத்தவரை மிதித்து கொன்ற போலீஸ்! – பற்றி எரியும் அமெரிக்கா!

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கைது செய்த போது இறந்த நிலையில் போலீஸாருக்கு எதிரான போரட்டங்கள் அமெரிக்காவின் பல மாகாணங்களில் வெடித்துள்ளது.

மினசோட்டா மாகாணத்தின் மின்னபோலீஸ் பகுதியில் வாழ்ந்து வந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். கடந்த திங்கட்கிழமையன்று இவரை ஒரு விசாரணைக்காக போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது “அவர் கள்ளப்பணம் வைத்திருந்ததாக கருதி விசாரணைக்காக கைது செய்தோம். அப்போது அவர் உடல்நல குறைவால் இறந்துவிட்டார்” என கூறியுள்ளனர். ஆனால் ஜார்ஜ் ஃப்ளாயிடை அவர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக அந்த பகுதியில் உள்ளவர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்ததின் படி ஜார்ஜ் ஃபிளாயிடை போலீஸார் கைது செய்தபோது மூர்க்கமாக தாக்கியுள்ளனர். மேலும் ஒரு காவலர் ப்ளாயிடை கீழே தள்ளி அவர் கழுத்து மேல் கால் மூட்டை வைத்து அழுத்தியுள்ளார். இதனால் மூச்சு திணறிய ப்ளாயிட் மூச்சு விட முடியவில்லை என்றும், என்ன கொன்று விடாதீர்கள் என்றும் கெஞ்சியுள்ளார். அவர் தாகமாய் இருக்கிறது என தண்ணீர் கெட்டதற்கு கூட அருகிலிருந்தவர்களை தண்ணீர் கொடுக்க காவலர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில் போலீஸார் அழைத்து சென்ற சிறிது நேரத்திலேயே ப்ளாயிட் உயிரிழந்தார்.

இதனால் ப்ளாயிடின் மரணத்திற்கு நீதிக்கேட்டு பொதுமக்கள் பலர் போரட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் தீயாக பரவிய நிலையில் மினசோட்டா மாகாணம் மட்டுமல்லாது சிகாகோ, இல்லினாய்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, மம்பிஸ் மற்றும் டெனசி ஆகிய மாகாணங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இதை தொடர்ந்து மினபோலீஸ் காவல்துறையுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது மினசோட்டா பல்கலைகழகம். தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டு வருகிறது.