1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (12:47 IST)

கணவருக்காக மதம் மாறிவிட்டீர்களா...? நச்சரித்த ரசிகர்களுக்கு நச்சுனு பதிலளித்த மணிமேகலை!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று  முஸ்லீம்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு உத்தரவினை சமூக விலகலை கடைபிடித்து வீட்டில் இருந்தபடியே தொழுகை செய்து குடும்பத்துடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். அந்தவகையில் கணவர் உசைன் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடன் சேர்ந்து ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம் போன்று முக்காடு அணிந்து கொண்டாடிய புகைப்படத்தை மணிமேகலை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதனை கண்ட ரசிகர் ஒருவர் முஸ்லீம் ஆக மாறிவிட்டீர்களா அக்கா..? என கேட்க அதற்கு பதிலளித்த மணிமகேலை, " பொங்கலுக்கு கோவிலுக்கும் போவோம் ரம்ஜானுக்கு கொண்டாடவும் செய்வோம் அந்த புகைப்படங்கள் அத்தனையும் எனது இன்ஸ்டாகிராமில் உள்ளது என கூறி எம்மதமும் சம்மதம் என்பதை அவரது ஸ்டைலில் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Eid Mubarak