திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 20 மே 2020 (15:31 IST)

இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியீடு !

தமிழ் சினிமாவில் ஆனந்தம்,ரன், சண்டக் கோழி, பையா போன்ற படங்களை இயக்கிய லிங்குசாமி சில வருடங்களாக படம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து அவர் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த ஒரு அறிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி நான் தான் சிவா என்ற படத்தை  லிங்குசாமி தயாரிக்கிறார். இப்படத்தை  ஆர். பன்னீர்செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஷின் மகன் வினோத் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா ஷெட்டி நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய… அந்தோணி படத்தொப்பு பணிகளை  மேற்கொள்கிறார். மேலும், டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.