வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 மே 2020 (06:46 IST)

அமெரிக்காவில் 93 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: திணறும் நிர்வாகம்

அமெரிக்காவில் 93 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் மிக வேகமாக பரவி வந்த போதிலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டின் நிர்வாகம் திணறி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தும் வருவது அந்நாட்டு நிர்வாகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் தினமும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்வதற்கே மிகப்பெரிய சிக்கலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 15,70,583ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,533ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவில் 299,941 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ஸ்பெயினில் 278,803 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரேசிலில் 271,885 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இங்கிலாந்தில் 248,818 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இத்தாலியில் 226,699 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரான்ஸில் 180,809 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலக அளவில் 49,85,658 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 324,889 பேர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது