1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:17 IST)

கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புகிறாரா?

kothapaya
முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார்
 
அதன்பிறகு அவர் தாய்லாந்து சென்றதாக கூறப்படும் நிலையில் நாளை கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கோத்தபய ராஜபக்சே நாளை அதாவது செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.