அமெரிக்க அதிபர் - ஜப்பான் பிரதமர் சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தையா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் பிரதமர் புமியோ என்பவரை ஜனவரி 13-ஆம் தேதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடு கடந்த பல ஆண்டுகளாக நட்புமுறையில் இருந்து வருகிறது என்றும் அந்த வகையில் ஜப்பான் நாட்டின் மீதான நட்பை மேலும் வலியுறுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஜப்பான் நாட்டிற்கு தென்கொரியா அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த பேச்சுவார்த்தை உதவும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் புமியோ சந்தித்து பேச உள்ளார் என்றும் இந்த சந்திப்பின்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பருவ நிலை மாற்றம், வடகொரியாவின் அச்சம், சீனாவில் நிலையும் நிலவும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran