பனிப்புயலை தொடர்ந்து கடும் மழை! அமெரிக்காவை வாட்டும் இயற்கை!
சமீபமாக பனிப்புயலால் உறைந்து போன அமெரிக்காவில் அடுத்து கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பொழிந்து வரும் கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. பனிப்புயலால் 60 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இந்த சோகம் மறைவதற்குள் அமெரிக்காவின் தெற்கு பிராந்தியங்களை கனமழை வெளுத்து வருகிறது. சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபொர்னியா ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மின்சாரமும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Edit By Prasanth.K