வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (15:08 IST)

அமெரிக்காவின் டார்ச்சரால் 2.5 லட்சம் ட்விட்டர் கணக்கு முடக்கம்! – பகிரங்கமாக சொன்ன எலான் மஸ்க்!

Elon mUsk
அமெரிக்க அரசின் நெருக்கடியால் ட்விட்டரிலிருந்து லட்சக்கணக்கான கணக்குகள் நீக்கப்பட்டது உண்மை என எலான் மஸ்க் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரை வாங்கியது முதலாக ட்விட்டர் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் உற்று நோக்கும் ஒன்றாகிவிட்டது. முன்னதாக ட்விட்டர் ப்ளூ டிக் கட்டணம், பணியாளர்கள் பணி நீக்கம், டிஷ்யூ பேப்பரை கையோடு எடுத்து வர சொன்னதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவை உள்ளே இழுத்துவிட்டு ட்ரெண்டாக்கியுள்ளார் மஸ்க்.

சமீபத்தில் பாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அரசு கொரோனா குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை வெளியிட்ட 2.5 லட்சம் ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டரை வற்புறுத்தியதாகவும், அதன்பேரில் அந்த கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த செய்தியை ரீட்வீட் செய்த எலான் மஸ்க் “அமெரிக்க அரசு டிமாண்ட் செய்ததால் பத்திரிக்கையாளர்கள், கனடா நாட்டு அதிகாரிகள் என உலகம் முழுவதும் மொத்தம் 2.5 லட்சம் பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது” என கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு கருத்து சுதந்திரம் குறித்த சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.

Edit By Prasanth.K