செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 ஜனவரி 2023 (08:27 IST)

இனி சமாதி, தகனம் தேவையில்லை: மனித உடலை இயற்கை உரமாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

dead
இனி இறந்த உடலை தகனம் செய்ய தேவையில்லை என்றும் இறந்த உடலை இயற்கை உரமாக மாறும் தொழில்நுட்பத்திற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மனித உடலை எரிப்பது மற்றும் சமாதி கட்டுவது என பல்வேறு விதங்களில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இறந்த உடலை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளது 
 
இந்த தொழில்நுட்பத்திற்கு நீண்ட ஆலோசனைக்கு பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த முறையில் இறந்த பிறகு புதைத்தல் அல்லது தகனம் செய்வதற்கு பதில் அந்த உடலை இயற்கை உரமாக மாற்றி மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் மேலும் சில மாகாணங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva