வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 மே 2019 (10:32 IST)

கஸ்டடியில் இருந்த கைதியுடன் உல்லாசம்; கைதான பெண் காவலர்!

கஸ்டடியில் இருந்த கைதியுடன் நெருங்கி பழகி கர்ப்பமாகியுள்ள பெண் காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
ஆபாச நடனமாடுபவராக இருந்து பின்னர் சிறைகாவலர் ஆன கனடாவை சேர்ந்த சுக்பிரீத் சிங் என்ற 24 வயது பெண் கைதியுடன் பழகி கர்ப்பமாகியுள்ளாதால் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
டாடும் என்ற அந்த கைதி திருட்டு வழக்கில் சிறைக்கு வந்தார். அப்போது அவன் சுக்பிரீத் சிங் கஸ்டடியில் விடப்பட்டான். முதலில் இருவருக்கும் ஒத்துவராத நிலையில், கைதி மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 
 
ஆனால், நாளடைவில் இந்த மோதல் காதலாக மாறி கைதியுடன் நெருங்கி பழகி தற்போது கர்ப்பமாகியுள்ளார். மேலும், அந்த கைதியை தனது அதிகாரத்தை பயன்படுத்து இரண்டு முறை தப்பவைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.