கனடா பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் மூவர் பலி

kanada
Last Modified வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:32 IST)
கனடியன் ராக்கீஸ் என்ற கனடா நாட்டு மலைப்பகுதியில், மலையேறுபவர்கள் மூன்று பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹவுஸி மலை உச்சியை ஏற முயன்ற மூன்று பேர், சரியான நேரத்தை கடைபிடிக்கவில்லை.
 
அவர்கள் ஏறிய பகுதிகளில் விமானம் மூலம் சென்று ஆய்வு செய்த தேசிய பூங்கா ஊழியர்கள், பனிப்புயல் மற்றும் அதில் சிக்கி விடப்பட்டிருந்த சில மலையேறும் உபகரணங்கள் இருக்கும் ஆதாரங்களை பார்த்துள்ளனர்.
 
மோசமான காலநிலை காரணமாக மீட்பு பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன.

இதில் மேலும் படிக்கவும் :