திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (17:10 IST)

மத்திய சிறையில் கைதிகள் - போலீஸார் இடையே மோதல்

சிறையில் மத்திய சிறையில் மதில் சுவர்மீது ஏறி கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் போலிஸார் அதிக சோதனைகளை நடத்தியதால் கைதிகள் போராட்டம் நடத்தியதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் சிறைக்கைதிகளுக்கு அதிக கெடுபிடிகள் விதித்ததாகவும் தெரிகிறது. இதனால் கைதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

அப்போது கைதிகள கையில் கிடைத்த கற்களைக் கொண்டு சாலையில் வீசி வருகின்றதாகவும் செய்திகள் வெளியாகிறது.

இம்மோதல் காரணமாக மதுரை மத்திய சிறைக்குச் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீதுஏறி போராட்டம் நடத்திவருகின்றனர்.