ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (13:08 IST)

பிணைக்கைதிகளை உயிருடன் மீட்டது இஸ்ரேல்! – காசாவில் அதிரடி ஆப்பரேஷன்!

Israel Hostages
இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடத்திக் கொண்டு சென்ற மக்களை உயிருடன் மீட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.



பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல ஆண்டு காலமாக மோதல் இருந்து வரும் நிலையில் நேற்று ஹமாஸ் அமைப்பினர் திடீரென 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தரை வழியாக இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லையோர நகரமான ஒபாகிமில் இருந்து ஏராளமான மக்களை பிணைக்கைதிகளாக கடத்திக் கொண்டு சென்றனர். ஏராளமானோரை சுட்டுக் கொன்றனர்.

பிணைக்கைதிகளை மீட்கும் அதிரடி ஆபரேஷனில் இறங்கிய இஸ்ரேல் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலிலும் ஈடுபட்டது. காசா முனையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய பதுங்குதளம் தாக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் பிணையக்கைதியாக பிடிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பலரையும் சுட்டுக் கொன்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K