வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (11:03 IST)

இஸ்ரேல் போரில் சிக்கிக் கொண்ட இந்திய நடிகை! – பாலிவுட்டில் பரபரப்பு!

Nushrat Bharucha
இஸ்ரேலில் போர் வெடித்துள்ள நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் இஸ்ரேலில் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்திக் கொண்டு தங்கள் ஆக்கிரமிப்பு பகுதியான காசா பகுதிக்குள் சென்று விட்டனர். இதனால் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ள இஸ்ரேல் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் போர் நடந்து வரும் இஸ்ரேலில் பிரபல இந்தி நடிகை நுஸ்ரத் பாருச்சா சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர் இஸ்ரேலில் நடைபெற்ற ஹய்ஃபா சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். கடைசியாக அவரிடம் நேற்று மதியம் 12.30 மணி அளவில் பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நுஸ்ரத் பாருச்சா பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K