செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (16:27 IST)

இந்தியாவிடம் இருக்கும் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை: இம்ரான்கான்

Imrankhan
இந்தியாவிடம் இருக்கும் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கக்கூடாது என அமெரிக்கா இந்தியாவிடம் கூறியபோது அதை கூறுவதற்கு நீங்கள் யார்? நாங்கள் சுதந்திர நாடு எங்கள் மக்களுக்கு தேவை என்றால் கச்சா எண்ணெய் வாங்குவோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்
 
அந்த துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை, அதனால்தான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை பாகிஸ்தான் வாங்காமல் உள்ளது. எனவே இந்தியாவுக்கு உள்ள துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை. பாகிஸ்தானின் நட்பு நாடாக அமெரிக்கா இருந்தபோதிலும் அமெரிக்கா பாகிஸ்தானை கச்சா எண்ணெய் வாங்க அனுமதிக்கவில்லை என்று இம்ரான்கான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.