புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (15:08 IST)

இனிமேல் காகிதமில்லா நடைமுறை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இனிமேல் காகிதமில்லா நடைமுறை இருக்கும் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தலையாய நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் உள்ளது. சமீபத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா  ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்து,   ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 49 வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின்  இந்திய அரசியலமைப்பு அமர்வில் இனிமேல் காகிதமில்லா நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அங்குள்ள வக்கறிஞர்களுக்கும் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என்றும்,  காகிதக் கட்டுகளுக்குப் பதில் வழக்கு விவரங்களை ஸ்கேன் செய்து காட்டும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.