திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:10 IST)

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ தளபதி உள்பட 6 பேர் பலி!

pak army
பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ தளபதி உள்பட 6 பேர் பலி!
பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டு ராணுவ தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் பயணம் செய்தனர்.
 
இந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் 
 
இந்த விபத்துக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது