வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: புதன், 21 செப்டம்பர் 2022 (08:45 IST)

கடந்த ஆண்டு பாகிஸ்தான்… இந்த ஆண்டு இந்தியா… போட்டியின் முடிவை மாற்றிய மேத்யூ வேட்டின் 2 இன்னிங்ஸ்கள்!

இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப்பறித்தார் மேத்யு வேட்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கை 15 ஆவது ஓவர் வரை ஓங்கி இருந்தது. ஒரு கட்டத்தில் கடைசி 4 ஓவர்களில் 60 ரன்கள் கிட்டத்தட்ட எடுக்க வேண்டுமென்ற இக்கட்டான நிலையில் ஆஸீ அணி இருந்தது. அப்போது அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யு வேட் சிறப்பாக சில பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி மளமளவென ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்.

6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களோடு அவர் 21 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆஸி அணியை வெற்றிபெற வைத்தார். அவரின் இந்த இன்னிங்ஸ் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

இதேபோலதான் கடந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து கடைசி கட்டத்தில் பாக் அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப்பறித்தார். இந்த இரண்டு இன்னிங்ஸ்களும் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் பேர்சொல்லும் இன்னிங்ஸ்களாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.