திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (22:16 IST)

ராணுவ ஹெலிகாப்டர் நடந்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழப்பு !

MYANMAR
மியான்மரில் உள்ள ஒரு பள்ளியின் மீது ராணுவ ஹெலிகாப்டர் நடந்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர்   நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி  நடந்த புரட்சியில் மியான் ராணுவர் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிலையில்,   அந்நாட்டில் உள்ள மத்திய சகாயிங் பிராந்தியத்தில்  உள்ள பகுதில் கெட் யெட். இப்பகுதியில் ஒரு புத்த மடாலயப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் மீது இன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இத்தாக்குதலில்,  7 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் மியான்மர் நாட்டில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.