திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜனவரி 2024 (11:25 IST)

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதா?

இந்திய பெருங்கடலில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 6.4 என நிலநடுக்கம்   பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் கடும் நிலநடுக்கம்  ஏற்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டது. இதனை அடுத்து  இந்தோனேசியா உள்ளிட்ட சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று இந்திய பெருங்கடலில் அதிகாலை 3:39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு பத்து கிலோமீட்டர் ஆழத்தில்  மையம் கொண்டிருந்ததாக புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்திய பெருங்கடல் மற்றும் பிரேசில் பகுதிகள் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva