திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 டிசம்பர் 2024 (13:17 IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதியில் வாகன போக்குவரத்தும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், ஏற்கனவே தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ள பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, ஒகேனக்கல், சிறுவாணி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சுற்றுலா பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Edited by Siva