திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (16:01 IST)

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: டெல்லி வரை உணரப்பட்டதால் பரபரப்பு..!

earthquake
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி வரை உணரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2:50 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் டெல்லி, காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருகிராம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  இந்தியா மட்டும் இன்றி பாகிஸ்தானில் உள்ள சில நகரங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது.

நிலநடுக்கம்  காரணமாக டெல்லியில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் இருந்த பொருட்கள் அசைந்ததாகவும் இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குரு கராம் பகுதியில் உள்ள ஐடி கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களும் நில அதிர்வு  காரணமாக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததாகவும் இதனால் வட மாநிலங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran