ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (22:19 IST)

work from home -ஐ அடுத்தாண்டு வரை நீட்டித்த கூகுள்!

தமது ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணி செய்யலாம் எனக் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

கொரொனா முதல் அலை பரவலின்போதே, உலகம் நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது, முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்யும்படி கூறியது. இதனால் ஊழியர்களும் work from home-ல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  

இதனால் work from home வசதியைநீட்டித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் தமது ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணி செய்யலாம்… அலுவலகம் வர விருப்பம் உள்ளவர்க தகவல் அளித்துவிட்டு, நேரில் வந்து பணிபுரியலாம் எனக் கூறியுள்ளது.