Daily Horoscope
✕

174 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானிக்கு நிதி திரட்டும் அமெரிக்கர்கள்!.. 88 லட்சம் வசூல்!..

Updated: வெள்ளி, 2 அக்டோபர் 2026 (17:13 IST)
சமீபத்தில் துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற Fly Dubai விமானத்தில் கேப்டன் ஸ்மித் மச்சாரை துணை விமாணி கத்தியால் குத்தினார். மேலும், விமானத்தை கீழே கொண்டு சென்று விபத்தை ஏற்படுத்த அவர் முயன்றார்.  ஆனால், பயணிகள் அதை தடுத்து நிறுத்தி துணை விமானியை கட்டிப்போட்டனர்.

மேலும், கேப்டன் ஸ்மித் மச்சாரின் உதவியோடு கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் கொடுத்தனர். அதோடு, விமானத்தை சமநிலைப்படுத்தி பறக்கவிட்டனர்.  விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதோடு அவரின் உதவியோடு துபாயில் விமானத்தை தரையிறக்கினார். கத்திக்குத்து பட்ட நிலையில் ஸ்மித் மச்சார் துணிச்சலாக பல விஷயங்களை செய்ததால் அமெரிக்கா பிரதமர் டொனால் டிரம்ப், இஸ்ரெல் பிரதமர் நெதன் யாகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை ஹீரோ என கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில், 174 உயிரை காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஆதரவாக அமெரிக்கர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். அவரது வீரச் செயலை பாராட்டி GODUNDME என்கிற தளத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 82 லட்சத்திற்கும் மேல் நிதி வசூல் ஆகியிருக்கிறது. எங்களை காப்பாற்ற உயிரையே பணயம் வைத்தீர்கள்.. உங்களை மறக்கவே மாட்டோம்’ என நிதி திரட்டும் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

மின் தடையா? ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் போதும்.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு...

2 முறை மரண தண்டனையை நிறைவேற்ற ஊசி போடும் சாகாத பெண்.. சட்ட வல்லுனர்கள் குழப்பம்..

சியாமி ஸ்மார்ட்போனின் முக்கிய மாடல் திடீர் விலை உயர்வு.. இந்தியாவில் மட்டும் ரூ.5000 உயர்வா?

நாடே உங்கள் பக்கம்!.. விமானி ஸ்மித் மச்சாருடன் வீடியோ காலில் பேசிய மோடி!..

விலைவாசி ஏறிப்போச்சி!.. ரீல்ஸ் பாத்தா பசி போகுமா?!.. விஜய்க்கு ஸ்டாலின் கண்டனம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments