அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்
அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது என எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டன.
இந்தியாவில் ஒரே நாளில் 640 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கலிபோர்னியாவில் இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. அதிக வாக்குகளை பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்டாலும், இன்னும் சில மாகாணங்களில், குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கலிபோர்னியாவில் 16 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மின்னஞ்சல் மூலமாக வாக்களித்தவர்கள் பலர், கையொப்பத்தை மறந்து விடுவது, தவறான இடத்தில் கையொப்பம் போடுவது, வாக்குச்சீட்டுகளை இணைக்காதது போன்ற பிழைகளைச் செய்துள்ளனர்.இந்த பிழைகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும், இறுதி முடிவு டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையே அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் தான் சிறந்தது என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
Edited by Siva