திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2024 (08:59 IST)

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் புதிய ஒயின் வகை! இஸ்ரேலில் அறிமுகம்!

President Trump Wine

அமெரிக்க தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவரது பெயரிலேயே புதிய ஒயின் வகை இஸ்ரேலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார் டொனால்டு ட்ரம்ப். இதை கொண்டாடும் விதமாக இஸ்ரேலில் உள்ள சாகட் ஒயினரீஸ் என்ற நிறுவனம் ‘ஜனாதிபதி ட்ரம்ப்’ (President Trump) என்ற ஒயின் வகையை அறிமுகம் செய்துள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பின்யாமின் மண்டல கவுன்சில் தலைவர் இஸ்ரேல் கான்ஸ் “இஸ்ரேல், ஜூடியா மற்றும் சமரியாவை நேசிக்கும் ஒரு ஜனாதிபதியை நாம் பெற்றதால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உள்ளோம். நிலையான தன்மை மற்றும் உண்மையான அமைதி ஆகியவற்றிற்காக இந்த ஒட்டுமொத்த பகுதியும் காத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
 

 

சாகட் ஒயினரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் பேசும்போது, எதிரிகளை எதிர்த்து இஸ்ரேல் போரிட்டு வரும் இந்த சிக்கலான காலக்கட்டத்தில் இஸ்ரேல் மீது அன்பு கொண்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வருவதை கொண்டாடுவது சரியாக இருக்கும் என பேசியுள்ளனர்.

 

Edit by Prasanth.K