57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேர்தலில், ஆளுங்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை கூட தேர்வு செய்ய முடியாத அளவுக்கு, எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மொத்தம் 288 தொகுதிகளில், 234 தொகுதிகளில் பாஜக கூட்டணி கைப்பற்றி உள்ளது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, பாஜக அரசு அமைந்தால், ஷிண்டே சிவசேனா கட்சி தான் எதிர்க்கட்சி வரிசையில் உட்காரும். இதனால், இந்த மாநிலத்தில் 57 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக எதிர்க்கட்சிகள் இருந்தும், அந்த கட்சிகளில் இருந்து ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva