அமெரிக்க தேர்தல் நடைபெறும் நாளில் ஏவுகணை சோதனை.. வடகொரியாவின் சேட்டை..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் தொடங்க இருக்கின்ற நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், நாளை காலை 5.30க்கு வாக்குப்பதிவு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
கிழக்கு கடல் பகுதியை நோக்கி பல்வேறு ஏவுகணைகளை வடகொரிய ராணுவம் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணைகள் சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து கடலில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க தேர்தல் நடைபெறும் நாளில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது பெரும் சேட்டையாக பார்க்கப்படுகிறது
Edited by Siva