திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (22:33 IST)

இணையவழி வகுப்பால்...சமத்துவமின்மை உருவாகும் - ராகுல்காந்தி கடிதம்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி . இவர் தற்போது வெகுவாக நடைபெற்று வரும் இணையவழி வகுப்பு தொடர்பாக கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு  ஒரு  கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில திங்கட்கிழமை அன்று கேரள  மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி,பள்ளியின் சார்பாக நடத்தப்பட்ட இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாததனால தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இணையவழி வகுப்புகள் நடத்த வேண்டாம் என பலரும் கோரிகை விடுத்து வருகின்றன.

எனவே, கேரளா மாநிலம்  வயநாடு தொகுதி எம்பி ராகுல்காந்தி,  இணைய வழி வகுப்புகள் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும் என கேரளா முதல்வருக்கும், வயநாடு மாவட்ட ஆட்சியர்  ஆதியா அப்துல்லாவுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.