வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (08:04 IST)

ஒரே ஒரு மாணவிக்காக படகை இயக்கிய கேரள அரசு – குவியும் பாராட்டுகள்!

கேரளாவில் ஒரு மாணவி தேர்வெழுத செல்வதற்காக 70 பேர் பயணிக்கும் படகை இயக்கியுள்ளது கேரள நீர் போக்குவரத்து துறை.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு இப்போது மாணவ மாணவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா என்ற மாணவி தேர்வு எழுத வேண்டும் என்றால் நீர்வழியாக படகில் சென்று பள்ளிக்கு சேரவேண்டிய சூழல் உருவானது.

இதையடுத்து கேரள அரசுக்கு உட்பட்ட நீர்வழிப் போக்குவரத்து படகுத்துறையை அனுகினார் மாணவி சந்திரா. இதையடுத்து மாணவி செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவிக்காக 70 பேர் அமர்ந்து செல்லும் வசதிக் கொண்ட படகை ஒரே ஒரு மாணவிக்காக இயக்கினர். ஆனாலும், ஒரு பயணிக்காக டிக்கெட் தொகையான 18.ரூபாயை மட்டுமே வசூலித்தனர். இது சம்மந்தமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவி நீர் போக்குவரத்து துறையை நினைத்து பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.