1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (21:23 IST)

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் - சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இன சமத்துவத்திற்கு எப்போதும் கூகுள் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கைது செய்த போது இறந்த நிலையில் போலீஸாருக்கு எதிரான போரட்டங்கள் அமெரிக்காவின் பல மாகாணங்களில் வெடித்துள்ளது.

இதை தொடர்ந்து போலீஸ் காவல்துறையுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது மினசோட்டா பல்கலைகழகம். தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்,நாள்தோறும் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வலுத்து வரும் போராட்டத்தால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, சமூக வலைதளங்களான கூகுள்,யுடியூப் ஆகியவை இன சமத்துவத்திற்கு துணைநிற்கும் என  தெரிவித்துள்ளார்.