திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ஒரே இரவில் ஆறு முறை ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!
திபெத் மற்றும் நேபாள எல்லையில் ஜனவரி 7ஆம் தேதி காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த நிலநடுக்கம் காரணமாக 126 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 200 பேர் வரை காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திபெத்தில் நேற்று இரவு மீண்டும் ஒரே இரவில் ஆறு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 4.4 என பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து உடனடியாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி சீன அதிபர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், மீட்பு பணிகளில் சுமார் 1500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆறு முறை அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக மக்கள் வீட்டுக்குள் செல்ல பயந்து, சாலையில் நின்று கொண்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran