எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
சீனாவில் உருவாகிய எச்.எம்.பி.வி. என்ற தொற்று எப்படி பரவுகிறது என்பதை பார்ப்போம்.
எச்.எம்.பி.வி. தொற்று எல்லா வயதினருக்கும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், இருமல் அல்லது தும்மலிலிருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் மூலமாக தான் அதிகமாக பரவுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த வைரஸ் லேசான சுவாச கோளாறு முதல் கடுமையான சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், குழந்தைகள், முதியவர்கள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தொற்றின் அறிகுறிகள் மூக்கு ஒழுகுதல், தொண்டையில் வலி, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை என்றும், இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், எச்.எம்.பி.வி. வைரஸ் பரவலை தடுக்க அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும் என்றும், சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வைரஸை தடுப்பதற்கு ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran