வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (10:58 IST)

உலக அழிவை காட்டும் “டூம்ஸ்டே கடிகாரம்”! 90 நொடிகள்தான் பாக்கி! – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Doomsday clock
உலகத்தின் அழிவை காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட டூம்ஸ்டே கடிகாரத்தில் 90 நொடிகளே மீதமுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலகம் போர், சுற்றுசூழல் மாசு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் மெல்ல அழிந்து வருகிறது. இந்நிலையில் உலக அழிவு குறித்து அபாயத்தை எடுத்துரைக்கும் விதமாக 1947ம் ஆண்டு நோபர் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் உருவாக்கியதுதான் டூம்ஸ்டே கடிகாரம் (Doomsday Clock).

இந்த கடிகாரத்தில் முள் நள்ளிரவு 12 மணியை தொட்டுவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் எனப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்படும் போர், சூற்றுசூழல் பாதிப்புகளை கொண்டு டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டில் டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரம் 12 மணி ஆக 3 நிமிடங்களே உள்ளதாக செட் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த கடிகாரத்தின் நொடிமுள் 12 மணி ஆக 90 வினாடிகளே உள்ளதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல், உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் பூமி அழிவதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Edit by Prasanth.K