புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (09:50 IST)

உலகம் முழுவதும் முடங்கியது மைக்ரோசாப்ட்! – அதிர்ச்சியில் பயனாளர்கள்!

microsoft
உலகம் முழுவதும் மைக்ரோசாப்டின் பலத்தரப்பட்ட சேவைகளும் திடீரென முடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கணினி ஆபரேட்டிங் சேவை நிறுவனமாக மைக்ரோசாப்ட் இருந்து வருகிறது. மைக்ரோசாப்டின் பிற சேவைகளான டீம், அவுட்லுக் மெயில் உள்ளிட்டவைகளும் உலகம் முழுவதும் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முதலாக உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகள் பல இடங்களில் முடங்கியுள்ளன. இதனால் பயனாளர்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர். அதை தொடர்ந்து ட்விட்டரில் இதுதொடர்பான ஹேஷ்டேகுகளையும் பலர் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் 360 என்ற ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், நெட்வொர்க்கில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அதற்கு தீர்வு காணும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்கொண்டு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K