புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (11:23 IST)

4 வாரங்களில் டிரம்ப் - கிம் சந்திப்பு... முந்திக்கொள்ளும் சீனா!

அணு ஆயுத சோதனைகள் காரணமாக வடகொரியா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்தது. இரு நாடுகளுக்கும் மத்தியில் மோதல் போக்கு நிலவி வந்தது. 
 
ஆனால், தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இரு கொரிய நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி, வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது.
 
இதில் ஒரு முக்கிய பங்காக வடகொரிய அதிபர் கிம் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளது. இது குறித்து டிரம்ப் பின்வருமாறு கூறியுள்ளார்....
 
இப்போதுதான் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் நீண்ட நேரம் பேசினேன். நல்லதொரு உரையாடல். எல்லா காரியங்களும் நல்லவிதமாக நடந்து வருகின்றன. வடகொரிய தலைவருடனான சந்திப்புக்கான இடமும், நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.
 
மேலும், டிரம்ப்பின் வட கொரிய தலைவருடனான சந்திப்பு இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் சீன வெளியுறவுத்துறை மந்திரி இந்த வாரத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.