திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (11:29 IST)

புது வரலாறு - இது அமைதிக்கான துவக்கம்: வடகொரிய அதிபர்...

வட கொரியா, தென் கொரியா அதிபர்கள் உச்ச மாநாடுக்காக சந்தித்துக்கொண்டனர். அந்த மாநாட்டில் கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் ஏற்படாது என்று இரு நாட்டு அதிபர்களும் உறுதியளித்துள்ளனர்.
 
வடகொரிய அதிபர் கிம் காலை 9.30 மணிக்கு பன்முன்ஜோமுக்கு சென்றார். எல்லையில் காத்திருந்த தென்கொரிய அதிபர் வடகொரிய அதிபரை பரவேற்றார். பின்னர் கிம் வேண்டுகோளை ஏற்று வடகொரிய மண்ணில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் கால் பதித்தார்.
 
அதன்பின் அமைதி இல்லத்தில் மாநாடு தொடங்கியது. இருநாட்டு அதிபர்களும் காலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். மதிய உணவுக்கு பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
அதன் பின்னர் இரு அதிபர்கள் பேசியது பின்வருமாறு,
 
வடகொரிய அதிபர், இரு கொரியாவும் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும். எல்லையில் நான் கடந்த வந்த சாலையை இருநாட்டு மக்களும் பயன்படுத்த வேண்டும். போர் அபாயம் இன்றி அமைதி யாக வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.
 
தென்கொரிய அதிபர், கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் அபாயம் இல்லை. இப்போது அமைதிக்கான புதிய யுகம் தொடங்கியுள்ளது. அணு ஆயுதம் இல்லாத கொரிய தீபகற்பத்தை உருவாக்க நானும் அதிபர் கிம்மும் உறுதி பூண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.