கருணாநிதி-சந்திரசேகரராவ் சந்திப்பு: 3வது அணியில் திமுக இணையுமா?
தமிழகத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக கட்சியை காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி கூட்டணியில் இணைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களின் முயற்சிகள் பலிக்குமா? என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பின்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 3வது அணி குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
3வது அணியின் முயற்சிக்கு சமீபத்தில் மம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு மம்தாபானர்ஜியும் நன்றி தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் திமுகவின் துரைமுருகன், மம்தாபானர்ஜிக்கு வாழ்த்துதான் தெரிவித்தோமே தவிர, அந்த கூட்டணியில் இணைய முடிவு செய்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும் கூறினார்.
இன்றைய தெலுங்கானா முதல்வரின் சந்திப்பை அடுத்து திமுக ஒருவேளை 3வது அணியில் இணைந்தால், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் டெபாசிட் வாங்குவது கூட கடினம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.