வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (15:10 IST)

ஈரானிடம் அணு ஆயுதங்கள் சிக்கிவிட கூடாது: டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் நாட்டை ஆட்சி செய்யும் அரசு அணு ஆயுதங்களை நெருக்க விடாமல் அமெரிக்க அரசு செயல்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 
வெள்ளை மாளிகையில் ஜெர்மனி நாட்டு பிரதமரை சந்துத்துப் பேசிய டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
மத்திய கிழக்கு நாடுகளில் எங்கே எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு ஈரான் நாட்டின் தலையீடு காரணமாக உள்ளது. சிரியாவில் இருந்து ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை முழுவதுமாக துடைத்து ஏறிய அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு கூட்டமைப்பு உறுதி பூண்டுள்ளது. 
 
சிரியா மற்றும் லெபனானில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் ஈரானின் திட்டங்களை தடுத்து, தகர்க்க வேண்டும். ஈரான் நாட்டின் கொலைக்கார ஆட்சியாளர்கள் அணு ஆயுதங்களை நெருங்க விடாதவாறு நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
 
மேலும், அவர்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என்பதை என்னால் கூற முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.