கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
உலகெங்கும் கொரோனா ஒமிக்ரான் திரிபு வைரஸ் தொற்று மூன்றாம் அலையை உருவாக்கியுள்ளது. முதல் இரண்டு அலைகளைப் போல அல்லாமல் இந்த அலையில் உயிரிழப்பு குறைவு என்பதே ஒரே ஆறுதல். அதற்கு உலக நாடுகள் தடுப்பூசியை பெருமளவில் மக்களுக்கு போட்டுவருவதும் ஒரு முக்கிய்க காரணமாகும்.
இந்நிலையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். தனக்கு சில கொரோனா அறிகுறிகள் தென் பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.