செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:14 IST)

யுடியூப் பார்த்து நாட்டு வெடிமருந்து… பன்றி வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது!

தேனி மாவட்டத்தில் நாட்டு வெடிமருந்து வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி வனப்பகுதியில் காப்புக்காடு எனும் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது சாக்குமூட்டையோடு சென்ற இருவரை சந்தேகப்பட்டு மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்த சாக்குப்பையில் 200 கிலோ எடையுள்ள கொல்லப்பட்ட காட்டுப்பன்றியும், வெடிமருந்து பொருட்களும் இருந்துள்ளன.

அவர்களைக் கைது செய்த விசாரணையில் அவர்களின் பெயர் சிவக்குமார் மற்றும் வேல்சாமி என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் யுடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு வெடி மருந்துகளை செய்யக் கற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளனர்.