வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (08:20 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்டது உண்மையிலேயே வ.உ.சி கொள்ளுப்பேத்தியா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டது உண்மையிலேயே வ.உ.சி கொள்ளுப்பேத்தியா?
நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் செக்கிழுத்த செம்மல் வ உசி அவர்களின் கொள்ளுப்பேத்தி உடல்நலக் குறைவினால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உடனடியாக மருத்துவமனை டீன் அவர்களிடம் தொடர்பு கொண்டு அரசு சார்பில் உதவியாளர் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கும்படி கூறியதாகவும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வஉசி யின் கொள்ளுப்பேரன் இந்த படத்தில் உள்ள இவருக்கும், செக்கிழுத்த செம்மல் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இவர் வஉசி யின் கொள்ளுப்பேத்தி இல்லை என்றும் நாங்கள் எங்கள் குடும்பத்தில் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் ஏன் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்பதையும் கண்டறியுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
வ.உ.சியின் கொள்ளுப்பேரன் இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது