புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (16:20 IST)

சீனாவில் மீண்டும் ஒரு கொடிய நோய் – பதறிப்போகும் மக்கள் !

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது புதிதாக கோழிகளுக்கு வரும் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த இரு மாதங்களாக 300க்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கி அந்நாட்டு மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் சீனாவுடனானப் போக்குவரத்துத் தொடர்பை முறித்துக் கொண்டுள்ளன. இதனால் சீனா பொருளாதார பின்னடைவுக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது புதிதாக தற்போது பறவைக் காய்ச்சல் நோய் பரவிவருவதாக வெளியான செய்தியினை சீனாவின் வேளாண் அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பண்ணை ஒன்றில் மொத்தமுள்ள 7,850 கோழிகளில் 4,500 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருந்ததால் அவற்றைக் கொன்றுள்ளனர். H5N1 என்ற இந்த வைரஸ் நோய்  பறவைகளுக்கு சுவாச நோயை ஏற்படுத்தும் தன்மை உடையது எனவும் அது மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது.