வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (14:02 IST)

சீனாவுக்கு போனால் இந்தியா வர வேண்டாம் --- மத்திய அரசு தடை

கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சீனா சென்ற வெளிநாட்டில் வருவதற்கு மத்திய ரசு தடை விதித்துள்ளது.
 
கடந்த 2 வாரங்களில் சீனாவுக்குச் சென்ற வெளிநாட்டினருக்கு வழங்கிய விசாவை, இந்தியா ரத்து செய்துள்ளது. அதேசமயம் சீனர்களும் இந்தியா வர தடை ரத்து செய்துள்ளது. மேலும் பிப்ரவரி 8 முதல் டெல்லி ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள்  ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொடூரமான கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதால்தான் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.