1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (19:13 IST)

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 7.5 கோடி: பிரபல நடிகையின் தாராளம்

கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கைக்காக உலக நாடுகள் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடப்பதால் கோடிக்கணக்கானோர் பசியும் பட்டினியுமான உள்ளனர்.
 
இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை மக்களின் பசியை போக்க நன்கொடையாக கொடுத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 7 கோடியே 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏஞ்சலினாவை அடுத்து இன்னும் சில அமெரிக்க நடிகர், நடிகைகள் நிவாரண நிதி கொடுக்க முன்வந்துள்ளனர். கொரோனாவால் பலியாவதை நிறுத்த முடிகின்றதோ இல்லையோ, யாரும் பசியால் செத்துவிடக்கூடாது என்று சக மனிதனுக்காக கோடிக்கணக்கில் பல வள்ளல்கள் நிதியுதவி செய்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு இயற்கை பேரிடரின்போதுதான் மனிதத்தன்மை வெளியே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.