வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2024 (14:38 IST)

தவறான உறவுமுறை காதலால் வாலிபர் வெட்டிக்கொலை பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணாபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன்  கூலி வேலை செய்து வருகிறார்.
 
இவரது உறவினரின் மகன் பெயர் கபிலன் இவர் சென்னை துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் மணிகண்டன் மகளை கபிலன் ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது அந்தப் பெண் இவருக்கு தங்கை முறையாவார்.
 
இதனால் குடும்பத்தார் பலமுறை எச்சரித்துள்ளனர் ஆனால் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிற்கு தொல்லை கொடுத்ததால் நேற்று இரவு மினாங்கன்னி பட்டி ரோட்டில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே வாலிபர் கபிலனை மணிகண்டன் மீண்டும் எச்சரித்துள்ளார்.
 
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிகண்டன் மறைத்து வைத்திருந்த அறிவாலை எடுத்து சரமாரியாக வெட்டினார் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கபிலனை விருவீடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
 
மேலும் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இது போன்ற ஒரு கொலை சம்பவம் நடைபெற்றதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.