வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (19:06 IST)

பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா: என்னடா நடக்குது பிரிட்டனில்?

பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா
உலகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனில் மட்டும் பொது மக்களை மட்டுமின்றி விவிஐபிக்களையும் அதிகளவு தாக்கி வருகிறது
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரிட்டனிலுள்ள இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் மற்றும் பிரிட்டன் பிரதமரை அடுப்பை பிரிட்டன் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக் அவர்களின் ரத்த பரிசோதனை முடிவு தற்போது வந்துள்ள நிலையில் அவருக்கு பாசிட்டிவ் இருப்பதால் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது