திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (02:32 IST)

இஸ்ரேல் பிரதமரை சந்தித்த அமிதாப்பச்சன் - ஐஸ்வர்யா ராய்

இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச்மின் நேதன்யாகு அவர்களை பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக்பச்சன் உள்ளிட்ட பலர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அவர்களையும், அவரது மனைவியையும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பான வரவேற்பை அளித்தார். மும்பை தாஜ் ஓட்டலில் தங்கியிருக்கும் இஸ்ரேல் பிரதமர், நேற்று மாலை நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

இந்த கலந்துரையாடலில்  அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரன் ஜோஹர், சுபாஷ் காய், இம்தியாஸ் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் உற்சாகமாக இஸ்ரேல் பிரதமருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இஸ்ரேல் பிரதமர் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது