1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (00:21 IST)

ஸ்டூல் போட்டுத்தான் நடிக்கணும்: சூர்யா உயரத்தை கலாய்த்த டிவி தொகுப்பாளிகள்

ஸ்டூல் போட்டுத்தான் நடிக்கணும்: சூர்யா உயரத்தை கலாய்த்த டிவி தொகுப்பாளிகள்
சூர்யாவின் உயரம் குறித்து நெட்டிசன்கள் அவ்வபோது கலாய்த்து வரும் நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு வசனத்தை வைத்திருந்தார்.  "நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை, எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்" என்ற இந்த வசனம் நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இன்று சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சினிமா கிசுகிசு குறித்து பேசிய இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யா படத்தில் அமிதாப் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சியில் சூர்யா ஸ்டூல் போட்டுத்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு தொகுப்பாளினி கிண்டலடித்தார்.

அதற்கு இன்னொரு தொகுப்பாளினி, இருவரையும் உட்கார வைத்து படமாக்கினால் உயரம் பிரச்சனை வராது என்றும் கலாய்த்தார். இந்த இரண்டு தொகுப்பாளினிகளுக்கும் சூர்யாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சூர்யா ரசிகர்களுக்கு ஆதரவாக அஜித், விஜய் ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.